Home
Neela Mala
Barnes and Noble
Neela Mala
Current price: $21.99
Barnes and Noble
Neela Mala
Current price: $21.99
Size: OS
Loading Inventory...
*Product information may vary - to confirm product availability, pricing, shipping and return information please contact Barnes and Noble
"இந்தப் பத்திரிகையில் வெளியாகும் கதைகளில் வரும் பெயர்கள் யாவும் கற்பனையே; சம்பவங்களும் கற்பனையே" என்று ஒரு வாக்குறுதியை நம்முடைய பத்திரிகைகளில் 'பளிச்'சென்று தெரிகிற ஓர் இடத்தில் போடுகிறார்கள் அல்லவா? அந்தக் காலத்தில் எல்லாம் கதைகள் மட்டும் அல்லாமல், பத்திரிகையில் வெளிவருகிற எல்லாவற்றுக்குமாக மொத்தமாகச் சேர்த்து அவை யாவும் கற்பனையே என்று வாக்குறுதி கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு நாள் ராஜாஜி என்னிடம் கேட்டார்கள் "இது என்ன இப்படி ஓர் அறிவிப்புப் போடுகிறீர்கள்? உங்களுடைய அரசியல் கட்டுரைகள் தலையங்கங்களுக்கும் இந்த வாக்குறுதி பொருந்தாதா?" என்று. நான் கல்கி பத்திரிகையின் ஆசிரியப் பொறுப்பில் இருந்த சமயம் அது. இதைத் தொடர்ந்து அந்த அறிவிப்பில் எப்படி மாறுதல் செய்யலாம் என்று யோசித்தோம். பிறகு, கற்பனைக் கதைகளுக்கு பட்டும் பொருந்துகிற முறையில் இந்த அறிவிப்பை உரிய மாறுதலோடு வெளியிடத் தொடங்கினோம்.